

தமிழக சட்டப்பேரவை தேர் தலில் தனித்து போட்டி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துவிட்டார். அவரது முடிவுக்காக காத்திருந்த திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை கூட் டணி பேச்சுவார்த்தைகளை சுறு சுறுப்பாக மேற்கொண்டு வரு கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவை இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, சமத்துவ மக்கள் கழகம், தமிழ் மாநில முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன், கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தையும் நடத்தினர்.
தமாகா, மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக அணியில் சேரும் என கூறப் படுகிறது. ஆனால், இந்தக் கட்சிகளுக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதிமுகவின் அழைப்புக்காக இந்தக் கட்சிகளின் தலைவர்கள் காத்திருக்கின்றனர். இது தொடர் பாக மமக தலைவர் ஜவாஹிருல் லாவிடம் கேட்டபோது, ‘‘அதிமுக விடம் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை’’ என்றார். ஆனால், தமாகா உள்ளிட்ட சில கட்சிகளுடன் அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
‘‘அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் தமாகா, மமக உள்ளிட்ட கட்சிக ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதும் மற்ற சிறிய கட்சி களையும் முதல்வர் அழைப்பார்’’ என்று அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
14 பேர் குழு
அதிமுகவில் ஓ.பன்னீர்செல் வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் ஓரங் கட்டப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள கட்சியின் அமைப்புச் செய லாளர் சி.பொன்னையன், பண் ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட் டோரைக் கொண்ட 14 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வினரே முதல்வரின் பிரச்சார பயணம், தேர்தல் அறிக் கையை இறுதி செய்தல், வேட் பாளர்களாக நிறுத்தப்பட உள்ள வர்களுக்கு தலைமையின் உத்த ரவுகளை அளித்தல் போன்ற பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.