Last Updated : 07 Jun, 2014 09:18 AM

 

Published : 07 Jun 2014 09:18 AM
Last Updated : 07 Jun 2014 09:18 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர் பாக கர்நாடகாவில் வருகிற 9-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டமும், 10-ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த‌ அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் டெல்லி சென்று மோடியை சந்திக்கவும் முடிவெடுக்கப்பட் டுள்ளது.

கடந்த ஜூன் 3-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில்,''கடந்த 5.2.2007 அன்று வெளியான காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 19.2.2013 அன்று மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி இடைக்கால கண்காணிப்புக் குழுவால் எவ்வித பலனும் இல்லை. எனவே இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் வரையறையை கண்காணிக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தையும் உடனடியாக அமைக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''காவிரி ஆற்றில் கர்நாடக அரசு பல்வேறு நீர் திட்டங்களை தன்னிச்சையா கவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் செயல்படுத்த முயற்சித்து வரு கிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் முறை யாக தர மறுக்கிறது. எனவே கர்நாடகாவின் செயல்பாட்டை கண்காணிக்கவும் அது தொடர் பாக‌ முறையிடவும் காவிரி மேலாண்மை வாரியம் அவசியம்" என கூறப்பட்டுள்ளது.

மோடி உடனடி உத்தரவு

மோடியிடம் மனு கொடுத்தது மட்டுமில்லாமல், ‘காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப் பட்டதும் காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளதாகவும் ஜெயலலிதா பேட்டியளித்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கர்நாடக முதல்வர் ஜூன் 4-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது. இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதி காரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும் அடுத்த அமைச்சரவை கூட்டத்திலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் பெறவும் திட்டமிட்டப் பட்டது. இது குறித்து முக்கிய மத்திய அமைச்சர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியானது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் க‌டும் எதிர்ப்பு தெரி வித்துள்ளன. மேலும் கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களும் கட்சி மேலிடத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெள்ளிக் கிழமை பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பேசுகை யில், ''தமிழக முதல்வர் ஜெய லலிதாவின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இப் போது அந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், மீண்டும் கர்நாடகாவின் சார்பாக அதனை கைவிடுமாறு கேட்டுக்கொள் கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்ப தால், அதுகுறித்து பேசுவது ஏற்புடையதல்ல. மேலும் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பல்வேறு குழுக்களை அமைத்து, வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதனை கர்நாடக அரசு முறையாக பின்பற்றி வருகிறது.

எனவே, இப்போது புதிதாக காவிரி மேலாண்மை வாரியமோ, காவிரி ஒழுங்கு முறை ஆணையமோ அமைக்க தேவையில்லை. அவ் வாறு புதிய வாரியங்களை அமைத் தால் கர்நாடகாவுக்கு தீங்கு இழைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதுகுறித்து ஆலோசிக்க ஜூன் 9-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோ சனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிறகு 10-ம் தேதி அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம்'' என்றார்.

இதுகுறித்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறுகையில், ''அரசி யல் சுயலாபத்திற்காக மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் பெரும் பிரச்சினை ஏற்படும். அதனைக் கைவிட வேண்டும்'' என்றார்.

மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும், விவசாய சங்கங் களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தலைவர்கள் மட்டும் மவுனமாக இருக்கிறார்கள். எனவே கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் பிரஹலாத் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்தகுமார், சித்தேஸ்வரா ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்துமாறு கேட்ட‌தாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா, மோடிக்கு எதிராகா போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மோடி, ஜெயலலிதா ஆகியோரைக் கண்டித்தும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அடுத்த வாரம் மைசூர், மாண்டியா, பெங்களூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எடியூரப்பாவும் எதிர்ப்பு

கர்நாடக பா.ஜ.க.வைச் சேர்ந்த‌ முன்னாள் முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை மாலை கூறியதாவது:

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசு ஒருபோதும் கர்நாடகாவுக்கு தீங்கு இழைக்காது. ஏனென்றால் தென்னிந்தியாவில் பா.ஜ.க.வை முதல் முறையாக முதல்வர் அரியணையில் அமரவைத்து அழகு பார்த்தவர்கள் கர்நாடக மக்கள். இந்த முறைகூட கர்நாடகாவில் காங்கிரஸைவிட பா.ஜ.க.வே அதிக இடங்களைக் (17 இடங்கள்) கைப்பற்றியது. பா.ஜ.க.வை நம்பி வாக்களித்த கர்நாடக மக்களுக்கு நிச்சயம் அநீதி இழைக்கவிட மாட்டோம். எனவே எத்தகைய சூழலிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்ப‌தை ஏற்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x