

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஜெ.குரு மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிட்டது. அப்போது, ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக சார்பில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் நிலையில், ஜெயங்கொண்டத்தில் குரு மீண்டும் போட்டியிடுகிறார். இதுதொடர்பாக ஜெ.குருவிடம் கேட்டபோது, “ஜெயங்கொண்டம் தொகுதியில் அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகள், நலத்திட்ட உதவிகளை செய்து இருக்கிறேன். மக்களிடம் எனக்கு ஆதரவு இருக்கிறது. இந்தத் தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன். அதை முறைப்படி கட்சித் தலைமை அறிவிக்கும். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்றார்.