

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் கடந்த 22-ம் தேதி இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பாமக மாவட்டச் செயலாளர் க.தேவமணி வீட்டுக்கு நேற்று சென்ற ஜி.கே.மணி, தேவமணியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டது திட்டமிட்ட சதி.ஏற்கெனவே அவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ள சூழலில், அவ ருக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், கொலை நிகழ்ந்த பகுதியில் வழக்கமாக இருக்கக் கூடிய ரோந்து பணி அன்று இல்லை.
மேலும், இரவு நேரத்தில் தேவமணியை காவல் நிலை யத்துக்கு அழைத்து, ஒரு வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். இதனால், பல சந்தேகங்கள் எழுகின்றன. எனவே, இந்த சம்பவத் தில் உண்மையைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண் டும் என்றார். அவருடன் வந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியது:
தேவமணி கொலை சம்பவத்தில் தொடர்புடையோர் குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. விசாரணை வரும்போது தெரிவிப்போம். காரைக்காலில் அரசியல் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் பெரும் ஜாம்பவான்கள் உள்ளனர். இவர்களை கண்டறிந்து தண்ட னைக்குள்ளாக்க வேண்டும். எனவேதான், சிபிஐ விசாரணை கேட்கிறோம் என்றார்.