தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணத்தை கொட்டும் வேட்பாளர்கள்: கணக்கில் வராத செலவுக் கணக்கு

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணத்தை கொட்டும் வேட்பாளர்கள்: கணக்கில் வராத செலவுக் கணக்கு
Updated on
1 min read

வேட்புமனு தாக்கல் செய்த அந்த நொடியிலிருந்து வேட்பாளரின் ஒவ்வொரு செலவும் 'தேர்தல் செலவு கணக்கில்' வந்துவிடும். சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு வேட்பாளர் ரூ. 28 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய முடியும். அதற்கு மேல் செலவு செய்தால் வெற்றிபெற்றாலும் செல்லாது.

உண்மையில் வேட்பாளர் களுக்கு என்னென்ன செலவுகள் உள்ளன, எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் என பல கேள்விகள் எழுவது உண்டு.

போட்டியிடும் வாய்ப்பை பெறவே பெரும் தொகை செல விட வேண்டியிருக்கும். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை சரிகட்ட வேண்டும். சிலநேரங்களில் கட்சித் தலைமையே ஒரு பட்டி யலை கொடுத்து இவர்களை எல் லாம் சரிகட்டுங்கள் என்று சொல் வதும் உண்டு என்கிறார் பல தேர்தல் களம் கண்ட ஒருவர்.

செலவுகள் குறித்து திமுக, அதிமுக வேட்பாளர்கள் சிலர் 'தி இந்து'விடம் பகிர்ந்து கொண் டவை:

தேர்தல் காலத்தில் மட்டு மல்ல. 5 ஆண்டுகளும் செலவு செய்ய வேண்டும். தேர்தல் அலுவலகங்கள் திறப்பும், அதில் வேலை செய்யும் தொண் டர்களுக்கான செலவும் முக்கி யமானது. செருப்புகூட அணியாதவர்கள், தேர்தல் வந்து விட்டால் கார் இல்லாமல் நகர மாட்டார்கள். எனவே, முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் கார் வழங்க வேண்டும். கூட்டணி கட்சிகளையும் தனியாக கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

வெற்றிகளை மட்டுமே கண்ட வேட்பாளர் ஒருவரிடம் கேட்ட போது, ''ஒவ்வொரு வாக்குச் சாவடி குழுவுக்கும் மொத்தமாக அல்லாமல் தவணை முறையில் பணம் கொடுப்பேன். மீண்டும் பணத்தை பெற வேண்டும் என் பதற்காக நன்றாக வேலை செய்வார்கள்'' என்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஒரு வரிடம் கேட்டபோது, '' ஜாதி, மத, சமூக, அமைப்புகளுக்கு கொடுப்பதுதான் பெரிய செலவு. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது என்றால் அந்த செலவை கணக் கிடவே முடியாது'' என்கிறார்.

“இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்கள் சார்ந்த கட்சிதான் தேர்தல் செலவை மேற்கொள்ளும். வேட் பாளருக்கான டெபாசிட் தொகை கூட கட்சியின் ஆதரவாளர் களோ அல்லது ஏதேனும் தொழிற் சங்கமோதான் ஏற்கும். வேட்பாளர்தரப்பில் இருந்து தேர் தலுக்கென எந்த செலவும் செய்வதில்லை. செய்யவும் கூடாது. கட்சி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், ஆதர வாளர்கள், கலைக்குழுக் கள் மூலம் பிரச்சாரம் நடக்கும். யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார்கள். எனவே, தேர்தல் ஆணையம் நிர்ணயித்த ரூ. 28 லட்சம் ரொம்பவே அதிகம்'' என்கிறார் இடதுசாரி வேட்பாளர் ஒருவர்.

வேட்பாளர்கள் குறைந்தது ரூ.1 கோடி வரை செலவு செய் கிறார்களாம். செலவே செய் யாமல் வென்றவர்களும் உண்டு. கோடிகளை கொட்டிவிட்டு தோற் பவர்களும் உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in