

இன்று உலக போலியோ தினம் முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளிங் போட்டி ஒன்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்
இன்று உலகம் முழுவதும் உலக போலியோ தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதில், சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பங்கேற்று சிறப்பித்தார்.
சென்னை இராணிமேரி கல்லூரி அருகில் நடைபெற்ற போலியோ விழிப்புணர்வுக்கான சைக்கிளிங் போட்டி நிகழ்ச்சியை சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ''End Polio Now'' என்ற வாசகம் தாங்கிய பனியனை அணிந்துகொண்டு ஏராளமான சைக்கிளிங் வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். உடன் ரோட்டரி அமைப்பின் நிர்வாகிகள் ராஜசேகரன், அருனிஷ் ஊபராய், கார்த்திக் சுரேந்தரன் கலந்துகொண்டனர்.