

கின்னஸ் சாதனை புரிந்ததற்காக பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி என பல மொழி திரைப்படங்களுக்கு பாடல்களை பாடி புகழ் பெற்றவர் பி.சுசிலா. தன் இளம் வயது முதலே இசையில் கொண்ட ஆர்வத்தினால் பாடத் தொடங்கிய அவர் இதுவரை 17 ஆயிரத்து 695 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அவரது இச்சாதனை தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. சுசிலாவின் இசைப்பணி தொடர நான் வாழ்த்துகிறேன்'' என வாசன்தெரிவித்துள்ளார்.