Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

காஞ்சிபுரம் வந்த பல்கேரிய நாட்டின் தூதர்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் சந்திப்பு

காஞ்சிபுரம் வந்த பல்கேரிய நாட்டின் தூதர் எழியோனொரா டிமிட்ரோவா (இடமிருந்து 3-வது), சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

காஞ்சிபுரம்

பல்கேரிய நாட்டின் பெண் தூதர்எழியோனொரா டிமிட்ரோவா,கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வந்தார். அப்போது அவர், சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பல்கேரிய நாட்டின் தூதர் எழியோனொரா டிமிட்ரோவா, கோயில் நகரமான காஞ்சிபுரம் வந்தார். பின்னர் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஓரிக்கை மஹாபெரியவர் மணி மண்டபத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரிய சிறப்புகளையும், ஒற்றுமைகளையும் அவர் விவரித்தார்.

இந்தியாவின் கலாச்சாரம்

ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்தியாவின் நெடுங்கால சரித்திரம் மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரிய முக்கியத்துவம் குறித்து விளக்கினார். குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோயில்களின் சிறப்புத் தன்மை மற்றும்மகத்துவத்தை கூறும்போது பல்கேரிய தூதர் ஆர்வமுடன் கேட்டார்.

இரு நாட்டு கலாச்சாரத்தின் கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்புமூலம்நாட்டின் உறவுகள் மேம்படும் என்றும், ஆன்மிக மற்றும்கலாச்சாரப் புத்தகங்களை மொழிபெயர்ப்பதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே தொடர்பும் நல்லுணர்வும் ஏற்படும் என்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

மீண்டும் காஞ்சி வர விருப்பம்

அவரை வணங்கி விடைபெற்றுக் கொண்ட தூதர் எழியோனொரா டிமிட்ரோவா, ‘‘தான் மீண்டும் காஞ்சிபுரம் வந்து கோயில்கள் மற்றும் தங்களை தரிசனம் செய்ய வேண்டும்’’ என்று விருப்பம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x