கஞ்சா வழக்கில் கைதானவர் ஊராட்சி துணைத் தலைவராக தேர்வு

விஜயலட்சுமி
விஜயலட்சுமி
Updated on
1 min read

சென்னை நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா. இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

இவரது மனைவி விஜயலட்சுமி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 20-ம் தேதி நெடுங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஜயலட்சுமி பங்கேற்றார். அவர் மேடையில் இருந்து கீழே இறங்கியதும் அங்கு வந்த ஓட்டேரி போலீஸார் அவரை கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் அவர் சிறையில் இருந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in