

இந்திய குடியரசுக் கட்சிக்கும், செ.கு.தமிழரசனுக்கும் இனி சம்பந்தமில்லை என அக்கட்சி யின் தேசிய தலைவர் ஒய்.பிர காஷ் அம்பேத்கர் அறிவித்தார்.
இந்திய குடியரசுக் கட்சி யின் செயல்வீரர்கள் கூட்டம் சென் னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரகாஷ் அம்பேத்கர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய குடியரசுக் கட்சி யின் தமிழக தலைவர் செ.கு.தமிழரசன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தன் னிச்சையாக செயல்பட்டு வருகி றார். அவரது நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்துள்ள கட்சி நிர்வாகிகளும் செயல் வீரர்களும் அவசர ஆலோ சனைக் கூட்டத்தை கூட்டியுள்ள னர். செ.கு.தமிழரசன் தமிழகத் தில் தனித்து செயல்படுவார். அவருக்கும் இந்திய குடியசுக் கட்சிக்கும் இனி சம்பந்தமில்லை.
தமிழகத்தில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கட்சியை புனரமைக்கும் நடவடிக்கை யில் ஈடுபடுவர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் விரைவில் நிய மிக்கப்படுவர். சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு என விரைவில் முடிவு செய்வோம். தமிழகத்தில் 25 சதவீத இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் மாற்றத்தை விரும்பு கின்றனர். இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.
பஞ்சமி மற்றும் புறம்போக்கு நிலங்களை தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்புத் திருமணம் செய்வோருக்கு அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகை களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.