கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி தகவல்
கோடை விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே தலைமையக பெண் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நடத் தப்பட்டு வரும் ஆஷ்ரயா பள்ளியின் (மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி) 22-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. ஆஷ்ரயா கமிட்டியின் உறுப்பினர் ஜெயந்தி சண்முகாநந்தம் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கிரிதரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். தெற்கு ரயில்வே தலைமையக பெண் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சீமா ஜோக்ரி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், நிருபர்களிடம் வசிஷ்ட ஜோக்ரி கூறியதாவது:
வரும் கோடை விடுமுறைக்கு தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு விரைவில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும். வேளச்சேரி பரங்கிமலை வரையில் இணைக்கப்படவுள்ள பறக்கும் ரயில் திட்டத்தில் இன்னும் 500 மீட்டர் தொலைவே கிடப்பில் இருக்கிறது. நிலத்தை கையகப்படுத்து வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தி விரை வில் முடிவு காணப்படும். இருப்பினும் ஒட்டுமொத்த பணி களை முடிக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகளாகும்.
செல்போன் மூலம்..
ஏ1, ஏ பிரிவு ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களை மேலும், தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் அதிநவீன செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் செல்போன் மூலம் பல்வேறு வசதிகளை பெற விரும்புகின்றனர்.
அதன்படி, பல்வேறு வசதி களையும் அறிமுகம் செய்து வருகிறோம். தேவையை அடிப் படையாக கொண்டு இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களுக்கு மக்களிடம் போதிய வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
