

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் நிறுவனங்களில் ஒன்றான இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையம் விருதுநகரில் தொடங்கப்பட்டது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வருகை இம்மையத்தில் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமை வகித்தார். இதயம் குழும நிறுவனர் முத்து, பயனீர் குழும இயக்குனர் மகேஸ்வரன், பென்டகன் குழும நிர்வாக இயக்குனர் ஜவகர், ஆர்.வி. பொறியியல் கல்லூரி தாளாளர் பிருந்தா ராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், "நாடு முழுவதும் 356 இடங்களில் இளைஞர்களுக்கான இதுபோன்ற திறன் வளர்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விருதுநகரில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், எங்கள் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் தேசிய அளவிலான திறன்மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வழங்க விரும்புகிறோம்.
அத்துடன் தற்போதைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு தேவைகேற்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ப தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.