

கரூர் மாவட்டம்லாலாபேட்டையில் மாநில கூட்டுறவு வங்கி தலைவர்சகோதரி வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப்பிரிவினர் சோதனையில்வருவாய்த்துறை மூலம் சொத்து விபரங்கள் சரிபார்க்கப்பட்டது.
முன்னாள் முதல்வர்பழனிசாமியின் ஆதரவாளரான சேலம் மாவட்டம் வாழப்பாடிஅ ருகேயுள்ளபுத்திரக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன். இவர் அதிமுகசேலம் மாவட்ட அம்மா பேரவை செயாளராகவும் மாநிலகூட்டுறவு வங்கிதலைவராக உள்ளார். இவருக்கு தொடர்புடையசேலம் உள்ளிட்டநான்கைந்து இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்கண்காணிப்புப்பிரிவின் இன்று (அக். 22ம் தேதி) சோதனை நடத்திவருகின்றனர்.
அதன் ஒருகட்டமாக இளங்கோவனின்சகோதரி இந்திராணி. கணவர் கலியபெருமாள்உயிரிழந்த நிலையில்மகன் கிருஷ்ணமூர்த்தியுடன்இவர் கரூர்மாவட்டம் லாலாபேட்¬யில் வசித்துவருகிறார். திண்டுக்க்ல் மாவட்ட ஊழல் தடுப்புகண்காணிப்புபிரிவு டிஎஸ்பி நாகராஜ்தலைமையிலான 5 போலீஸார் இந்திராணி வீட்டில் இன்று (அக். 22ம்தேதி) காலைமுத் சோதனைநடத்தி வருகின்றனர்.
சோதனையின்போதுவருவாய்த்துறையினர் வரவழைக்கப்பட்டு மடிக்கணினிமூலம் இந்திராணியின் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்துவிபரங்கள் சரிபார்க்கப்பட்டது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.