

ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு உதவுவதற்காக பெண் அதிகாரியை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. மகளிர் தின பரிசாக ரயில்வே நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டியில் பெண்கள் தனியாக பயணம் செய்யும் போது அசவுகரியமாகவும், பாதுகாப்பில்லா உணர்வுடனும் இருப்பதாக ரயில்வே நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவுவதற்காக அமுதா என்ற உதவி வர்த்தக மேலாளரை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. இவரை 9003160980 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்கள், தங்கள் குறைகளை இவர்களிடம் தெரிவித்தால் உடனடியாக அவருக்கு வேறு இடத்தில் இருக்கை ஒதுக்கித் தரப்படும். அவ்வாறு புகார் தெரிவிக்கும் போது சம்பந்தப்பட்ட பெண் பயணி தனது பெயர் மற்றும் அலைபேசி எண்ணைத் தெரிவிக்க வேண்டும். இதைத் தவிர, பெண் பயணிகள் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ரயில்வே பாதுகாப்பு உதவி எண் 182-ஐ தொடர்பு கொண்டும் உதவி கோரலாம்.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.