234 தொகுதிகளிலும் ‘வாட்ஸ் அப்’ பிரச்சாரத்துக்கு அதிமுகவில் தனி குழு

234 தொகுதிகளிலும் ‘வாட்ஸ் அப்’ பிரச்சாரத்துக்கு அதிமுகவில் தனி குழு
Updated on
1 min read

சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர், நாளிதழ்கள், வானொலி, தொலைக் காட்சிகள் மூலம் விளம்பரம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ள கடும் கட்டுப்பாடுகளும் செலவு கணக்கு சிக்கலும் ஏற்படுகிறது. இதனால் ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அதிமுக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

கட்சியின் செயல்பாடுகள், தலைவர் களின் கருத்துகள், எதிரணி மீதான விமர்சனம், கேலி, கிண்டல்களை வேக மாக பரப்பி வருகின்றனர். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக திமுகவின் சமூக வலை தள பிரச்சாரம், மற்ற கட்சிகளைவிட வேகமாக இருப்பதாகவும், அவர்களின் கேலி, கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் அதிமுகவினர் திணறுவதாகவும் கருத்து நிலவியது.

இதையடுத்து அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை ஜெயலலிதா விரிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே அஸ்பயர் சுவாமிநாதன் தலைமையில், இயங்கி வந்த இப்பிரிவில் மாநில இணைச் செயலாளர்களாக வேலூர் மேயர் கார்த்திகாயினி, மதுரை மேயர் ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், தனியார் ஐ.டி. நிறுவன உரிமையாளர் சத்யன் ஆர்.சுந்தர ராஜன் ஆகியோரும் மாவட்டத்துக்கு தலா 14 நிர்வாகிகளும் புதிதாக அறி விக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 234 தொகுதிகளிலும் ‘டாஸ்க் ஃபோர்ஸ்’ ஏற்படுத்துவற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் கூறும்போது, “அதிமுக அரசின் சாதனைகள் குறித்த படங் களை உருவாக்கி, அதை சமூக வலை தளங்களில் பரப்புதல், திமுக உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுக்கும் விமர் சனங்களுக்கு தகுந்த ஆதாரங்கள், பழைய சம்பவங்களுடன் பதிலடி கொடுக்கும் வகையில் 2 குழுக்களை அமைக்கிறோம். இதற்கென மாநில, மாவட்ட தலைநகரங்களில் தனி அலு வலகங்கள் செயல்படும். இதுதவிர ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி யிலும் 20 பேரைக் கொண்ட ஐ.டி ‘டாஸ்க் ஃபோர்ஸ்’ உருவாக்கப்படு கிறது. அவர்கள் மக்களிடம் வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரம் செய்வார்கள். இது அதிமுக வெற்றிக்கு நிச்சயம் உதவும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in