

கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது, முதல்வர் வேட்பாளர் யார் ஆகிய பிரச்சினைகளால்தான் கூட்டணி அமைப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த திருச்சி, புதுக் கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களுக்கான நேர்காணல் திருச்சி யில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர் களிடம் கூறியது:
அதிமுகவுக்கான மாற்று திமுக கிடையாது. ஊழலில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். ஊழலைப்பற்றி பேச திமுகவுக்கு உரிமை இல்லை. ஊழல் விதைக் கப்பட்டதே திமுக ஆட்சியில்தான்.
பல்வேறு கட்சிகள் இணைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியாக 2014-ல் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். 2016 சட்டப்பேரவைத் தேர்தலையும் இதே கூட்டணியில் சந்திக்க விரும்பினோம். எனினும், முதல்வர் வேட்பாளர் யார், கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது ஆகிய பிரச்சினைகளால், கூட்டணியை அமைப்பதில் தாமத மும், தடங்கலும் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் சில கட்சிகள் இணை யலாம். சில கட்சிகள் பிரியலாம். எனினும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக இருந்து இந்த தேர்தலைச் சந்திக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணி கட்சிகளின் தலை வர்கள் பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்றுக் கொண்டார் கள். ஆனால், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் தலைவ ரும், முதல்வர் பதவியை விரும்பு கின்றனர். இதனால்தான் கட்சிகள் இணைப்பு சிக்கலாக உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்துப் பணியாற்றி வெற்றிபெற்று, பின்னர் முதல்வரை அறிவிப்பதுதான் சரியானதாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
நாங்கள் எந்தக் கட்சிக்காகவும் காத்திருக்கவில்லை. வந்தால் நல்லது. வரவில்லையென்றாலும் கவலையில்லை. அதிமுக, திமுக வுக்கு எதிரான அத்தனை கட்சிகளையும் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டுள் ளோம். ஊழலுக்கு எதிராக உள்ள மக்கள் நலக் கூட்டணி வந்தாலும் அரவணைப்போம்.
ஆதரவு அதிகரிப்பு
வரும் 19, 20-ம் தேதிகளில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. அதில், தமிழக தேர்தலுக் கான தக்க வழிகாட்டுதல்கள் கிடைக்கும். தமிழகத்தில் பாஜக வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. திமுக, அதிமுகவைப் பிடிக்காததால், கடந்த தேர்தலில் வாக்களிக்காத 1.40 கோடி பேரின் வாக்கு இம்முறை பாஜகவுக்கு கிடைக்கும்.
தேமுதிகவுடன் நாங்கள் நேரடி யாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தி யது குறித்து திமுகவினர் வெளியில் கூறாதது ஏன்? சிதம்பரத்தில் நான் யாரையும் சந்திக்கவில்லை. கட்சிப் பணிக்காக மட்டுமே சென்றிருந்தேன்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.