Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM

`இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தீபாவளி மலர் - 2021’ வெளியீடு

`இந்து தமிழ் திசை'யின் `தீபாவளி மலர் - 2021' முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி நேற்று வெளியிட்டார். `இந்து தமிழ் திசை' நாளிதழின் விளம்பரப் பிரிவு மேலாளர் விசாலம் அருகில் உள்ளார்.படம் : பு.க.பிரவீன்.

சென்னை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் தீபாவளி மலர் - 2021 நேற்று வெளியிடப்பட்டது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி மலர் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தீபாவளி மலர் நேற்று வெளியிடப்பட்டது. `தீபாவளி மலர் - 2021' முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி நேற்று வெளியிட்டார்.

260 பக்கங்கள் கொண்ட தீபாவளி மலர் ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள `இந்து' நாளிதழின் முகவர்களிடமும், கடைகளிலும் கிடைக்கும். store.hindutamil.in என்ற இணையதள முகவரி மற்றும் 99406 99401 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் நேரடியாக பதிவு செய்தும் வாங்கிக் கொள்ளலாம்.

‘இந்து தமிழ்’ தீபாவளி மலரில் ஏராளமான சுவாரசிய தகவல்கள் உள்ளன. தீபாவளி குறித்து விநாடி-வினா பாணியில் கேள்வி-பதில்களைத் தருகிறார் பிரபல குவிஸ் மாஸ்டர் ஜி.எஸ்.எஸ்; பிரபல கரிசல் எழுத்தாளர் பாரததேவி எழுதிய தீபாவளி குறித்த மண் மணம் கமழும் அனுபவக்கதை; முன்னணி நாயகிகளான ஜோதிகா, த்ரிஷா, சமந்தா, காஜல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சாய் பல்லவி, அஞ்சலி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைப் பற்றிய விரிவான ஆளுமைக் கட்டுரைகள். திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட மம்முட்டியின் தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இதில் உள்ளன.

மேலும் ஒலிம்பிக் வரலாற்றில் நிகழ்ந்த சுவாரசிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வாழ்வு இனிது பகுதியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத்தின் விரிவான பேட்டி; பிரபல தமிழ் எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன், எஸ்.ராஜகுமாரன், மாத்தளை சோமு, அமிர்தம் சூர்யா ஆகியோரின் சிறப்புக் கட்டுரைகள்; பிரபல எழுத்தாளர் யூமா.வாசுகியின் குழந்தை கதை உள்ளிட்ட பிரபல ஆளுமைகளின் படைப்புகள் இந்த தீபாவளி மலரில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x