Last Updated : 15 Mar, 2016 09:19 AM

 

Published : 15 Mar 2016 09:19 AM
Last Updated : 15 Mar 2016 09:19 AM

கடந்த கால அனுபவங்களால் உஷார்: வேட்பாளர் தேர்வில் பாஜக புது முடிவு

கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் சிலர் கடைசி நேரத்தில் வேறு கட்சி களுக்கு தாவியதால் இந்த முறை வேட்பாளர் தேர்வில் எச்சரிக்கையாக இருக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களிடம் தமிழகம் முழு வதும் 13 கோட்டங்களில் கடந்த 2 நாட்களாக நேர்காணல் நடத்தப் பட்டது. சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், திருச்சியில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியா குமரியில் மூத்த தலைவர் இல.கணே சன் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர். நேர்காணலின் முடிவில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 முதல் 5 வேட்பாளர்கள் கொண்ட பட்டி யலை மாநிலத் தலைமையிடம் அளித் துள்ளனர்.

கடந்த 2009-ல் தேனி மாவட்டம் கம்பம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மு.சசிக்குமார் தேர்தலுக்கு சில நாள் களுக்கு முன்பு மு.க.அழகிரி முன்னி லையில் திமுகவில் இணைந் தார். அதேபோல கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டா லின், சைதை துரைசாமிக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட் பாளர் ராஜராஜன், கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட் பாளர் குருமூர்த்தி, மாற்று வேட் பாளர் அன்பரசன் ஆகியோரின் மனுக்கள் உரிய ஆவணங்கள் அளிக் கப்படாததால் நிராகரிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளருக்கு ஆதர வாக வேண்டுமென்றே உரிய ஆவணங்களை இணைக்காமல் மனு தாக்கல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய பாஜக மேலிடம், குருமூர்த்தி, அன்பரசன் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியது.

அதுபோல 2014-ல் நடைபெற்ற நெல்லை மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட் பாளர் வெள்ளையம்மாள், கடைசி நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதுபோன்ற செயல்களால், பாஜக வுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

மத்தியில் பாஜக தனித்து ஆட்சியில் இருப்பதால் 234 தொகுதிகளுக்கும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர். எனவே, தற்போது வேட்பாளர் தேர் வில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் நேர்காணல் நடத் திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘வேட்பாளர்கள் தேர்வில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்துள்ளோம். குற்றப் பின்னணி உள்ள யாரையும் வேட்பாளர்களாக நிறுத்த மாட்டோம்’’ என்றார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கடந்த காலங்களில் பாஜக வேட் பாளர்கள் பலர் வேட்புமனுக்களை வாபஸ் பெறுதல், கட்சி மாறுதல், வேட்புமனுவை தவறாக தாக்கல் செய்தல் என மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடு பட்டனர். இதனால் கட்சிக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. எனவே, தற்போது வேட்பாளர் தேர்வில் மிகுந்த எச்சரிக்கையை கடைபிடிக்குமாறு கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி உள்ளோம். கட்சியின் மீது பிடிப்பு கொண்டவர்கள், எதற்கும் விலை போகாமல் கட்சிக்காக தியாகம் செய்யும் எண்ணம் கொண்டவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x