தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இளங்கோவன் - ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் மோதல்

தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இளங்கோவன் - ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் மோதல்
Updated on
1 min read

சென்னையில் நடந்த காங்கிரஸ் தேர்தல் ஆலோசனைக் கூட்டத் தில் இளங்கோவன், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி காங்கிரஸ் சார்பில் வட்டார அளவில் ஆலோசனை கூட்டங்கள், கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. ஆயிரம் விளக்கு, தி.நகர் பகுதிகளைத் தொடர்ந்து சைதாப்பேட்டை வட்டார காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தமிழக காங் கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், சைதாப்பேட்டை வட்டம், தென் சென்னை மாவட்டத்துக்கு உட் பட்ட பகுதியாகும். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ப.சிதம்பரத்தின் ஆதர வாளர் கராத்தே தியாகராஜன்.

ஆலோசனைக் கூட்டம் குறித்து தியாகராஜன் தரப்பைச் சேர்ந்த வட்டார காங்கிரஸ் தலை வர் முத்தமிழுக்கு தகவல் தெரி விக்கவில்லை என்று கூறப்படு கிறது. ஆனாலும் முத்தமிழ் உள்ளிட்ட ப.சிதம்பரம் ஆதர வாளர்களும் கூட்டத்துக்கு சென் றனர். அப்போது அவர்களுக்கும் இளங்கோவன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த குமரன் நகர் போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதுதொடர் பாக 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in