Last Updated : 20 Oct, 2021 01:26 PM

 

Published : 20 Oct 2021 01:26 PM
Last Updated : 20 Oct 2021 01:26 PM

டெங்கு பரவல் தடுப்பு: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்

காரைக்கால்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென தொடர்புடைய துறைகளின் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(அக்.20) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார், காரைக்கால் நகராட்சி ஆணையர் காசிநாதன் மற்றும் தொடர்புடைய பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆட்சியர் பேசியது: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் நலவழித்துறையுடன் இணைந்து வட்டார வளர்ச்சித்துறை, காரைக்கால் நகராட்சி நிர்வாகம், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்கள் அதிகமாக பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே சுற்றுப்புறங்களில், பொது இடங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதோடு, காய்ச்சலை உண்டாக்கும் காரணிகளை அழிக்க வேண்டும்.

குப்பைகளை சேரவிடாமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும். கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்படாதவாறு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அரசு பொது மருத்துவமனையில் எந்த ஒரு காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்கக்குடிய வகையிலான வசதிகள், மருன்ந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x