

ரங்கம் கீழ அடைய வளஞ் சான் வீதியைச் சேர்ந்த கிருஷ்ண சாமி மகன் தியாக ராஜன்(39). திருமணமாகாதவர். லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கணக்குப் பிரிவு இளநிலை உதவி யாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலை யில் இறந்து கிடந்தார். தகவலறிந்த ரங்கம் போலீ ஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தியாகராஜனின் அறையில் இருந்து, ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. போலீஸார், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரங்கம் போலீ ஸார் கூறும்போது, “அலுவலகத் தில் பணிபுரியும் உயர் அதிகாரி களே தற்கொலைக்கு காரணம் என சிலரின் பெயரைக் குறிப்பிட்டு தியாகராஜன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இதுதவிர, இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் பணிக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள தியாகராஜன், அப்பணியில் சேர காலதாமதம் ஏற்பட்டதால் மன உளைச்சலுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.