

சட்டப்பேரவையில் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியுள்ள தேமுதிக, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் களை தேர்வு செய்வதற்காக எல்.கே.சுதீஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை நிய மித்துள்ளது.
இந்த குழுவில் கூடுதலாக சிலரை நியமிக்க முடிவு செய் யப்பட்டது. அதன்படி, தேமுதிக துணைச் செயலாளர்கள் ஆர்.உமாநாத், பி.முருகேசன், ஜாகீர் உசேன் ஆகியோர் தேர்வுக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொகுதிவாரியாக விருப்ப மனுக்களை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. மனு அளித்தவர் ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவரா, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டவரா, அவரது பொருளாதார பின்புலம் எப்படி, அவர் வகிக்கும் பொறுப்பு என்ன என்பதைக் கொண்டு வேட்பாளர் பரிந்துரை பட்டியல் தயாரிக்கப்படுவதாவும் இந்தப் பணி 10 நாட்களுக்கு நடக்கும் என்றும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.