Published : 16 Mar 2016 08:05 AM
Last Updated : 16 Mar 2016 08:05 AM

தேர்தல் தொடர்பான சோதனைகளின்போது ரூ.50 ஆயிரம் வரை பறிமுதல் கூடாது: பறக்கும் படையினருக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவு

தேர்தல் தொடர்பான சோதனை களின்போது, பொதுமக்கள் ரொக்கமாக ரூ.50 ஆயிரத் துக்குக் குறைவாக வைத்திருந் தால் அவற்றைப் பறிமுதல் செய்யக் கூடாது. அவர்களை அலைக்கழிக் கவோ, துன்புறுத்தவோ கூடாது என அதிகாரிகளுக்கு தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள் ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பு கடந்த 4-ம் தேதி வெளியானது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்க உள்ள நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தொகுதி தோறும் பறக்கும்படைகள், நிலை யான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. தொகுதிக்கு 3 என 702 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டன. வருவாய், காவல்துறையினர் இடம் பெற் றுள்ள இந்தக் கண்காணிப்பு குழுக்கள் சோதனையிடும் பணி களைத் தொடங்கியது. இதன்படி ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்படும் ரொக்கம், பரிசு பொருட்கள், அரசு இலவசப் பொருட்கள், மதுபான பாட்டில் களைப் பறிமுதல் செய்து வருகின்றன.

இந்நிலையில், சோதனை என்ற பெயரில் பொதுமக்களை நிறுத்தி வைப்பதாகவும் அலைக்கழிப்ப தாகவும் கண்காணிப்பு குழுக்கள் மீது ஊடகங்களில் புகார்கள் வெளி யாகின. சோதனைச் சாவடி பணியில் உள்ளவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாகனங்களைச் சோதனை செய்வதில்லை என்றும், உரிய ஆவணங்கள் வைத்திருந்தாலும் உடனடியாகப் பணத்தைத் திருப் பியளிக்காமல் அலைக்கழித்து வருவதாகவும் தேர்தல் ஆணை யத்துக்கும் புகார்கள் வந்தன.

மேலும் ரூ.3 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரொக்கம் வைத்திருந்தாலும் போலீஸார், காக்க வைத்து அதன்பின் அனுப்புவதாகப் பொதுமக்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் கவனத்துக்குச் சென்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடந்த தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் ராஜேஷ் லக்கானி பங்கேற்றார். பின்னர் சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘சிறுவியாபாரிகள், வணிகர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகக் கொண்டு செல்பவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

அதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரி களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பணம் பறிமுதல் செய்வது தொடர்பாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.அவர் கூறியதாவது:

பொதுமக்கள் ரூ.50 ஆயிரத் துக்கும் குறைவாகப் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யக்கூடாது. அதற்கு அதிக மாகக் கொண்டு சென்றால், அந்தப் பணம் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதை விசாரித்து உறுதி செய்து உடனடியாகத் திருப்பி அளிக்க வேண்டும். பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் அளித்தால், 2 நாட்களில் திருப்பி யளிக்க வேண்டும். பொதுமக்களை சோதனை என்ற பெயரில் அலைக் கழிக்கவோ, நிறுத்தி வைக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.

இவ்வாறு தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் தொடர்பாக 2 ஆயிரத்து 376 புகார்கள் வந்துள்ளன. வாட்ஸ் அப்பில் 300 புகார்களைப் பதிவு செய்துள்ளனர். தேர்தலுக்கான துணை ராணுவப்படையைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலை விட அதிகமாகக் கேட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று அவர் கூறினார்.

ரூ.7.40 கோடி பறிமுதல்

தேர்தல் விதிகள் அமல்படுத்தப் பட்ட நாளில் இருந்து மார்ச் 13 வரை ரூ.7 கோடியே 40 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 78 ஆயிரத்து 300 மி.லி. மதுவகைகள், 27 புடவைகள், ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 151 அரிசி பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை, கடலூரில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 30 மி.லி. அயல்நாட்டு மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு 73 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x