தேமுதிக- பாஜக பேரமா?- வைகோ மன்னிப்பு கேட்க எச்.ராஜா வலியுறுத்தல்

தேமுதிக- பாஜக பேரமா?- வைகோ மன்னிப்பு கேட்க எச்.ராஜா வலியுறுத்தல்
Updated on
1 min read

பாஜக தங்களுடன் பேரம் நடத்தவில்லை என்று தேமுதிகவே கூறியுள்ளது. இதனால் தேமுதிகவுடன் பாஜக பேரம் நடத்தியதாக கூறிய வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும்.

கூட்டணிக் கட்சிகள் கேட்ட தொகுதியை தவிர்த்துதான் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ஜ.ஜெ.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது.

வைகோ இருக்கும் இடத்தில் எப்போதும் கொந்தளிப்பு இருக்கும். வைகோ ஒரு நிலையான முடிவை எப்போதும் எடுக்க மாட்டார்.

பாஜக தங்களுடன் பேரம் நடத்தவில்லை என்று தேமுதிகவே கூறியுள்ளது. இதனால் தேமுதிகவுடன் பாஜக பேரம் நடத்தியதாக கூறிய வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in