

குருத்தோலை ஞாயிறு நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகர மக்கள் அவரை ஒரு கோவேறு கழுதையில் அமரவைத்து ‘தாவீதின் மகனுக்கு ஓசானா’ என்று பாடியவாறு பவனி யாக அழைத்துச் சென்றதாக கிறிஸ் தவர்களின் புனித நூலான பைபி ளில் கூறப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி யை கிறிஸ்தவர்கள் குருத்து ஞாயி றாக அனுசரிக்கின்றனர்.
அதன்படி, புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறுக்கிழமையான நேற்று குருத்து ஞாயிறு அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனியும், சிறப்பு ஆராதனையும் நடந்தன. சென்னை யில் சாந்தோம் திருத்தலம், மயிலாப்பூர் லஸ் சர்ச், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம், புதுப்பேட்டை அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சின்னமலை ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும் அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள சிஎஸ்ஐ செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயத்தில் போதகர் இம்மானுவேல் தேவகடாட்சம் தலைமையில் குருத்தோலை பவனி, சிறப்பு ஆராதனையும் நடந்தன. ராயப் பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், வேப்பேரி அந்திரேயா ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ தேவால யங்களிலும் சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை புறநகர் பகுதியான மறைமலைநகர் தூய விண்ணரசி அன்னை ஆலயத்தில் பாதிரி யார்கள் விக்டர், அகஸ்டின், பங்குத் தந்தை மரியநாயகம் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலியும், ஆராதனையும் நடைபெற்றது. பெருங்களத்தூர் குழந்தை ஏசு ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனியிலும், ஆராதனையிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.