Published : 25 Mar 2016 08:54 AM
Last Updated : 25 Mar 2016 08:54 AM

பாஜக - ஐஜேகே கூட்டணி: ரவி பச்சமுத்து தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலை பாஜகவுடன் சந்திப்பது தொடர்பாக ஐஜேகே - பாஜக இடையே சென்னை கமலாலயத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜக தரப்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்களும், ஐஜேகே தரப்பில் கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து, தலைவர் கோவைத்தம்பி, பொதுச்செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

பின்னர் ரவி பச்சமுத்து கூறும்போது, “பாஜகவுடன் கூட்டணி குறித்து சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவுள்ளோம். மக்களவைத் தேர்தலில் உருவான பாஜக ஐஜேகே கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வாய்ப்பு உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x