

கட்சி தொடங்கிய 50 ஆண்டுகளில், தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக மட்டுமே என முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா பேசினார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண் மனை முன்பாக எம்ஜிஆர், ஜெயல லிதா உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சியில் தொடர்ந்து பணி யாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் மறைந்தவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். நகர் செயலாளர் அங்குச்சாமி வரவேற்றார். ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளர் அசோக்குமார், இளைஞர் பாசறை சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா பேசும்போது, கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் ஆன நிலையில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக மட்டும்தான் என்றார்.
பரமக்குடி, பார்த்திபனூர், நயினார்கோவில், சத்திரக்குடி, கடலாடி, சாயல்குடி ஆகிய இடங்களிலும் அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது.