

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் குறுக்கே வந்த பேருந்து மீது கார் மோதி 4 பேர் உயிரிழந்தனர். படுகாய மடைந்த 2 பேர் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(70). இவர், நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சி யில் கலந்துகொண்டார். திருமணம் முடிந்து நேற்று அதிகாலை சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி காரில் புறப்பட்டனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்றிருந்த தனியார் பேருந்து திடீரென சாலையின் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய கார், பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த கிருஷ் ணன்(70), சாத்தப்பன்(60), பொன்ன ழகு(52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அழகு ராணி(45) என்பவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல் லும்போது வழியில் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ஜானகி அம்மாள், டிரைவர் சரவணகுமார் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்த வேப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங் களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அழகுராணியின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதுகுறித்து வேப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான தனியார் பேருந்து டிரைவர் ஆரோக்கியதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.