தேர்தல் நடத்தை விதிகள் அமல்: வெறிச்சோடிய தலைமைச் செயலகம்

தேர்தல் நடத்தை விதிகள் அமல்: வெறிச்சோடிய தலைமைச் செயலகம்
Updated on
1 min read

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, பரபரப்பான தலைமைச் செயலகம் நேற்று மாலை அமைதியடைந்தது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு தேதி அறிவிக் கப்பட்டதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தன. முதலில் தலைமைச் செயலகத்தில், 6-வது எண் நுழைவு வாயிலில் உள்ளே அமைக்கப்பட்டுள்ள, அரசு சாதனைகள் விளக்கும் வகையில், குறும்படங்கள் திரையிடப் படும் எல்.இ.டி., திரை அணைத்து வைக்கப் பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முதல்வர் தொடர்பான படங்களை அகற்றும் பணியில் செய்தித்துறையினர் ஈடுபட்டனர்.

நேற்று, காலை தலைமைச் செயலகத்துக்கு வந்த ஒரு சில அமைச்சர்கள்கூட தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது, தலைமைச் செயலகத்தில் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் மட்டும் அலுவலகத்தில் இருந்தார். பின்னர் அவரும் தலைமைச் செயலகத்தில் இருந்து சென்றுவிட்டார்.

அமைச்சர் அலுவலகங்களில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டன. ஒரு சில அமைச்சர்களின் அலுவலகங்கள் தவிர மற்றவற்றின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. மேலும், எம்எல்ஏக்களின் அலுவலகங்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த 2 மணி நேரத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பத்திரிகையாளர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகளை விளக்கினார். பழைய கருத்தரங்க அரங்கில் நடந்த கூட்டத்துக்கு ராஜேஷ் லக்கானி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், அந்த அறையில் இருந்த முதல்வர் படம் அவசர அவசரமாக அகற்றப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், துறை செயலர்களின் செயல்பாடுகளில் பெரும்பாலும் அமைச் சர்கள் தலையீடு இருக்காது. தற்போது அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தில் இல்லை என்பதால், அரசுத்துறை உயர் அதிகாரிகளை வெளியில் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் நேற்று தலைமைச் செயலகம் அமைதியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in