

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜய குமாரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட் டத்தில் அரிசி ஆலைகள் அதிக மாக உள்ளன. இந்த ஆலை களை நம்பி, பல சரக்கு லாரிகள் இயங்குகின்றன. சாலை விதிகளை மதித்து அதிக பாரம் ஏற்றுவதில்லை என்று எங்கள் சம்மேளனம் முடிவு செய்து, செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்கள், எங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்காமல், அதிக பாரத்தை ஏற்றிச்செல்ல தயாராக உள்ள ஆந்திர மாநில லாரிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் நாங்கள் வேலை வாய்ப்பை இழந்து நிற்கிறோம்.
அதனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமாரை செவ்வாய்க் கிழமை சந்தித்து மனு அளித்திருக் கிறோம். வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் மனு அளித் திருக்கிறோம். இவர்கள் நட வடிக்கை எடுக்காவிட்டால், வட்டார போக்குவரத்து அலுவல கத்தை முற்றுகையிடும் போராட் டத்தை நடத்த உள்ளோம் என்றார் அவர்.