ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

Published on

தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி தென்மாநிலங்களில் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அம்மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து உதகையில் திரண்டு வருகின்றனர். அரசினர் தாவரவியல் பூங்காவை கடந்த மூன்று நாட்களில் சுமார் 20,000 சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.

நேற்று உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 9,668 பேரும், அரசினர் ரோஜா பூங்காவுக்கு 4,927 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 792 பேரும், மரவியல் பூங்காவுக்கு 195 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 3,440 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 1,005 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 302 பேரும் வந்திருந்தனர். இன்று மற்றும் நாளை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in