

சென்னை மாவட்டத்தில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாக உள்ள வாக்குச் சாவடிகளில், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த, அங்கு கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத் தப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திர மோகன் தெரிவித்தார்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், வாக் காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் பங்கேற்று பேசியதாவது:
சென்னையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த மக்களவைத் தேர்தலில் 62 சதவீதம் பதிவானது. வாக் களிக்க தகுதியுள்ள அனை வரையும், எவ்வித எதிர்பார்ப் பும் இல்லாமல் வாக்களிக்கச் செய்து, சென்னை மாவட்டத் தின் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
தேர்தல் நடைபெறும் வரை ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும் ஊர் வலம், மனிதச் சங்கிலி என பல் வேறு வடிவங்களில் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
மேலும், பேருந்து நிறுத் தங்கள், பெரிய வணிக வளா கங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு குறைந்த வாக்குச் சாவடிகள் கண்டறியப் பட்டு, அங்கு அதிக அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அந்தந்த மண்டல அலுவலகங்களில் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற் றப்பட்டுள்ளன. சுவரொட்டியில் பெயர் முகவரி தெரிவிக்கப்படா விட்டால், அச்சிட்டோர் மற்றும் பதிப்பாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் இது வரை பணம் எதுவும் பிடிபட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைநிகழ்ச்சிகளை பார்த்து ரசித்த அவர், பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு பாதாகையில் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கோவிந் தராஜ், ஆஷியா மரியம் ஆகியோர் கலந்து கொண் டனர்.