

அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த நூற்றுக்கும் மேற்பட்டவர் களிடம் முதல்வர் ஜெயலலிதா அவ ரது போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று நேர்காணல் நடத்தினார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களி டம் 2-ம் கட்டமாக நான்காவது நாள் நேர்காணல் நேற்று நடைபெற்றது. முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா நடத்திய இந்த நேர்காணலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்கெனவே நடைபெற்ற நேர்காணலின்போது விடுபட்ட திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் (கிழக்கு தொகுதி) உள்ளிட்ட மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் விருதுநகர், சிவகங்கை மாவட்டங் களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வர்களிடம் முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.
அதிமுக தலைமை அலு வலகத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொண்ட குழுவை 100-க்கும் மேற்பட்ட சிறிய அமைப்பினர் மற்றும் கட்சியினர் சந்தித்து இத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். ஏற்கெனவே 139 சிறிய அமைப்பினர் மற்றும் கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.