Published : 14 Mar 2016 10:34 AM
Last Updated : 14 Mar 2016 10:34 AM

தேர்தலில் தேமுதிகவின் தலைமையை ஏற்கலாமா?- ம.ந.கூட்டணியினர் தீவிர ஆலோசனை

விஜயகாந்த் தலைமையை ஏற்று தேர்தலை சந்திக்கலாமா என்று மக்கள் நலக் கூட்டணியினர் தீவிர ஆலோசனையில் ஈடு பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார். மேலும் தங்கள் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் பேசத் தயார் என்று பிரமேலதா விஜய காந்த் கூறினார். இதனடிப்படை யில், மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப் புள்ளதாக கூறப்பட்டது. அதை மறுத்த ம. ந. கூட்டணியினர், தங்களது அணிக்கு தேமுதிக வரவேண்டும் என்றனர்.

இதற்கிடையே மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேற்று முன்தினம் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இது தொடர்பாக மதிமுக நிர்வாகி ஒருவர் கூறிய தாவது:

திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி யுள்ளோம். கூட்டணியை பலப் படுத்தும் நோக்கில்தான் தேமுதி கவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால், தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ள தேமுதிக, தனது தலைமையை ஏற்க வேண்டும் என்று கூறி யுள்ளது. விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த துமே, அவரை வைகோ தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அப்போது மக்கள் நலக் கூட்டணிக்கு வரு மாறு அவருக்கு மீண்டும் அழைப்புவிடுத்தார். ஆனால், தேமுதிக அணிக்கு வருமாறு விஜயகாந்த் கூறினார். இது பற்றித்தான் 4 கட்சித் தலைவர் களும் நேற்று முன்தினம் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தேமுதிக பக்கம் சென்றால் எத்தனை இடங்களை கேட்க லாம், யாரை முதல்வர் வேட்பாள ராக ஏற்பது என்பது குறித் தெல்லாம் விவாதிக்கப்பட்டது. மேலும், கூட்டணி பற்றி எந்த முடிவையும் எடுக்காமல் உள்ள தமாகா, புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மமக, ஐஜேகே என 10-க்கும் அதிகமான கட்சிகளிடமும் இதுபற்றி பேசலாமா என்கிற ரீதியில் ஆலோசனை நடத்தப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x