

சினிமா மூலம் நாட்டுப்புறப் பாடல்களைப் பட்டிதொட்டியெங் கும் பரவச் செய்த நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப் பாயி(80), அரசு வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் வாழ்க்கை நடத்தி வறுமையில் வாடி வருகிறார். சுமார் 10 சினிமா படங்களில் நடித்தும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட சேர்க்காமல் கைவிட்ட சங்கம் மீது வருத்தத்தில் உள்ளார்.
மதுரை-தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி. இவரை 1985-ல் இயக்குநர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகப்படுத் தினார். இப்படத்தில் இளையராஜா வின் இசையில் இவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல் வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க உறுப்பினரில்லை..
நலிந்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் ரூ.1,500 நிதி உதவியுடன் கொல்லங்குடியில் வறுமையுடன் வாழ்க்கை நடத்தி வரும் இவர் `தி இந்து’விடம் கூறியதாவது:
நான் படிக்காதவள், மனசுல தோணுவதை அப்படியே பாடு வேன். வயல் வேலைக்குப் போறப்ப களைப்பு தெரியாம இருக்கப் பாடுவேன். ரேடியோவுலயும் பாடி யிருக்கேன். அதை கேட்டுட்டுத்தான் நடிகர் பாண்டியராஜன் சாரு ‘ஆண் பாவம்’ படத்துல என்னை நடிக்கக் கூப்பிட்டாரு. ’ஆண்களை நம்பாதே’, ’கபடி கபடி’, ’கோபாலா கோபாலா’ன்னு நெறைய படங் கள்ல நடிச்சிருக்கேன். இத்தன படங்கள்ல நடிச்சிருந்தும் என்னை நடிகர் சங்க உறுப்பினரா யாரும் சேர்க்கலை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கலைமாமணி விருதை பெருமையா நெனைக்கிறேன். அர சாங்கம் நலிந்த கலைஞர்களுகக்கு தர்ற உதவித் தொகையிலதான் என் பொழப்பு ஓடுது. அந்தப் பணம் 15 நாளைக்குத்தான் வருது. மருத்துவச் செலவு, நல்லது கெட்டது என செலவுக்கு கடன்தான் வாங்க வேண்டியிருக்கு. தமிழக முதல்வருக்கு உதவித் தொகையைக் கூடுதலா கேட்டு மனு போட்டிருக்கேன். இன்னும் பதில் கிடைக்கலை என்றார்.