திருமண நிகழ்வில் 100 பேர்; இறப்பு நிகழ்வில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

நவம்பர் 1ஆம் தேதி முதல் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரையும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் வரையும் கலந்துகொள்ள அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று சராசரியாக 1,300-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கரோனா பரவல் குறைந்திருந்தாலும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து நேற்று (அக். 13) முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், பல்வேறு தளர்வுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 14) வெளியிட்ட உத்தரவில், "நவம்பர் 1ஆம் தேதி முதல் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கு பெற அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்துகொள்ள அனுமதி" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in