ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

நவம்பர் 1ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று சராசரியாக 1,300-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கரோனா பரவல் குறைந்திருந்தாலும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அத்தியாவசியத் தொழில்கள், பொழுதுபோக்கு சார்ந்த பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து நேற்று (அக். 13) முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் பல்வேறு தளர்வுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 14) வெளியிட்ட உத்தரவில், "நவம்பர் 1ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in