

ரேஷன் பொருட்கள் விநியோகம்தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவுத் துறைச்செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமீபகாலமாக சில சமூக ஊடகங்களில், மத்திய, மாநில அரசு அலுவலர்கள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகளில் குடியிருப்போருக்கு ரேஷன் அரிசி விநியோகம் இல்லை என்று பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
பொது விநியோகத் திட்டத்தில்எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், அனைத்து பொருட்களையும் பெறலாம். சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள்முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.