Published : 04 Mar 2016 08:38 AM
Last Updated : 04 Mar 2016 08:38 AM

நெருங்கும் தேர்தல்.. தெறித்து பறக்கும் நட்சத்திரங்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் நிலைப்பாடு என்ன என்பது பல்வேறு தரப்பினரால் கவனிக்கப்படும். இதனால் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் வெளிநாடுகளுக்குப் பறக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி

சமீபத்தில் நடந்த ரஜினி ரசிகர் களின் மாநாடு அதிமுக அரசால் மிகவும் உன்னிப்பாக கவனிக் கப்பட்டது. பேனர்கள், கட்-அவுட்கள் வைத்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்த, அதிமுக அரசு ஒருகட்டத்தில் மாநாட் டுக்கு அனுமதி மறுத்திருக்கிறது. மாநாட்டுக்கு ரஜினி வரவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்புதான் அனுமதி வழங்கியது. தற்போது '2.0' படத்தில் நடித்து வரும் ரஜினி, விரைவில் அப் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்கிறார். முக்கிய காட்சிகளை பொலி வியா நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அங்கு செல்வார்கள் என்கிறது நம்பதகுந்த வட்டாரங்கள்.

கமல்

அரசியலில் இருந்து ஒதுங் கியே இருக்கும் கமல், இந்த தேர்தலில் முக்கியமாக கவனிக் கப்படுகிறார். காரணம், சென்னை வெள்ள பாதிப்பின் போது அவருக்கும் அதிமுக அரசுக்கும் ஏற்பட்ட அறிக்கைப் போர்தான். இதனால், இந்த மாத இறுதியில் ராஜீவ் குமார் படத்தின் படப்பிடிப்பில் பங் கேற்க அமெரிக்கா செல்ல திட்ட மிட்டிருக்கிறார் அவர். அதே சமயம் வாக்களிப்பது ஜனநாயக உரிமை என்பதால் வாக்களிக்க மட்டும் அவர் சென்னை வந்துச் செல்வார் என்கின்றார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

விஜய்

நாகப்பட்டினத்தில் எப்போது மீனவர்கள் நலனுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தாரோ அப்போதே விஜய்யை ஒவ் வொரு தேர்தலிலும் கவனிக்கப் படுகிறார் விஜய். இந்த முறை 'தலைவா' படத்தின் போது எழுந்த பிரச்சினை மிக உன்னிப்பாக கவனிக்கப்படு கிறது. அந்தப் படத்தின் தலைப்பின் கீழ் இருந்த 'TIME TO LEAD' என்ற தலைப்பை நீக்கும் வரையில் படத்தின் வெளி யீட்டில் பிரச்சினை நிலவியது. இறுதியாக விஜய் வீடியோ பதி வின் மூலம் பேசிய வீடியோ வெளிவந்த பின்பே படம் வெளி யானது. தற்போது அவர் 'தெறி' படத்தை முடித்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். அதேசமயம் தேர்தல் தேதியில் விஜய் கட்டாயம் வாக் களிக்க வந்துவிடுவார் என்கிறார் கள் அவரது ரசிகர்கள்.

அஜித்

கடந்த திமுக ஆட்சியின் போது 'பாசத் தலைவனுக்கு பாரட்டு விழா' என்ற பெயரில் நடந்த விழாவில் அஜித் ‘விழாக் களுக்கு எங்களை வற்புறுத்தி அழைக்கிறார்கள்' என்று பேசி னார். அவரது பேச்சுக்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டினார். அப்போது அது பெரும் சர்ச்சை யானது. கருணாநிதியை அஜித் சந்தித்த பின்பே சகஜ நிலை ஏற்பட்டது. அப்போது முதல் தீவிர அமைதியில் ஆழ்ந்து விட்டார் அஜித். எதைப் பற்றி யும் பேசுவதில்லை; எந்த கருத் தையும் சொல்வதில்லை. ரசிகர் மன்றத்தையும் கலைத்து விட்டார். விரைவில் அவர் குடும் பத்துடன் ஒரு மாதம் லண்டன் செல்ல இருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இவர்களை தவிர தென்னிந் திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங் கங்களின் நிலைப்பாடுகளும் அலசப்பட்டு வருகிறது. கூட் டணி முடிவாகி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மேலும் சில மாற்றங்களைத் தமிழ் திரை யுலகம் காணக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x