

சுற்றுலா பயணிகளுக்கு உகந்த துறைமுகமாக சென்னை துறைமுகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் கப்பல் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவை மற்றும் சர்வதேச தரத்திலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவது ஆகியவற்றை அங்கீகரித்து சென்னை துறைமுகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலா துறையின் உதவியுடன் வழங்கப்படும் இந்த விருதை தமிழக சுற்றுலா துறை மற்றும் மதுரா வெல்கம் என்ற நிறுவனம் சென்னை துறைமுகத்துக்கு அண்மையில் வழங்கியது.
இந்திய மற்றும் தமிழக சுற்றுலா துறை ஒத்துழைப்புடன் சென்னை துறைமுகம் இந்தியாவின் சிறந்த துறைமுகமாக மாற்றப்படும் என இவ்விழாவில் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.