திராவிட கட்சிகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: நா.ம.க தலைவர் கார்த்திக் கருத்து

திராவிட கட்சிகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: நா.ம.க தலைவர் கார்த்திக் கருத்து
Updated on
1 min read

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் மு.கார்த்திக் தெரிவித்தார்.

திருநெல்வேலி சி.என். கிராமத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘நாடாளும் மக்கள் கட்சி இம்முறை வலுவான கூட்டணியில் இடம்பெறும். கடந்த காலங்களில் பல கட்சிகள் நாடாளும் மக்கள் கட்சியை மதிக்காமல் தேவர் இன ஓட்டுகளை மட்டும் தங்கள் வெற்றிக்காக பயன்படுத்திக் கொண்டன. இனிமேல் அது நடக்காது. எங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எந்த கூட்டணி என இன்னும் ஒரு வாரத்தில் தெரிய வரும். மக்கள் நலனே முக்கியம். அதை முன்னிறுத்தியே கூட்டணி அமைப்போம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது’ என்றார்.

லேசான தடியடி

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மேடையில் இருந்து கார்த்திக் இறங்கி வந்தபோது, பலரும் முண்டியடித்து அவர் அருகே சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்களை போலீஸார் விலக்கி விட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நாற்காலியை தூக்கி போலீஸார் மீது வீசினார். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in