ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: தூத்துக்குடி ஆட்சியரிடம் மீனவப் பெண்கள் மனு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்க வந்த மீனவ கிராமப் பெண்கள்.  படம்: என்.ராஜேஷ்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்க வந்த மீனவ கிராமப் பெண்கள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, மீனவப் பெண்கள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி பாத்திமா நகர், இனிகோ நகர், லூர்தம்மாள்புரம், திரேஸ்புரம், லயன்ஸ் டவுன், அலங்காரத்தட்டு பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பெண்கள் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுக்களின் விவரம்:

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுஉள்ளது. அவ்வாறு வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் சரியான வேலைவாய்ப்பும், போதிய ஊதியமும் கிடைப்பதில்லை.

தமிழக அரசால் எல்லா மக்களுக்கும் வேலை கொடுக்க முடியாது. இதுபோன்ற பெரிய தொழிற்சாலைகளால்தான் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.எனவே, ஸ்டெர்லைட் ஆலையைமீண்டும் திறந்து, படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பண்டாரம்பட்டி கிராம மக்களும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in