அரசு இ-சேவை மையங்களில் கூடுதலாக 6 சேவைகள் அறிமுகம்: பிறப்பு, இறப்பு சான்றிதழும் பெறலாம்

அரசு இ-சேவை மையங்களில் கூடுதலாக 6 சேவைகள் அறிமுகம்: பிறப்பு, இறப்பு சான்றிதழும் பெறலாம்
Updated on
1 min read

அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறும் வசதி உள்பட கூடுத லாக 6 சேவைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்கள் அமைக் கப்பட்டு அவை பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகின் றன. தற்போது இந்த சேவை மையங் களில் கூடுதலாக கீழ்க்காணும் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

1. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறும் வசதி.

2. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுவை ஆன்லைனில் பதிவுசெய் யும் வசதி மற்றும் ஏற்கெனவே பதிவு செய்த மனுவின் தற் போதைய நிலையை தெரிந்து கொள்ளும் வசதி.

3. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பான சேவைகள், பொது விநியோகத் திட்டம் தொடர்பான புகார்களை தனியாகவும், பொது விநி யோகத்திட்டம் அல்லாத புகார் களை தனியாகவும் பதிவுசெய்யும் வசதி, பதிவு செய்த புகார் மனுவின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ளும் வசதி.

4. பயிற்சி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் நேர்காணலுக்கான தேதி தெரிந்துகொள்ளும் வசதி.

5. பத்திரப்பதிவுக்கான முன் அனுமதி நாள் பதிவுசெய்து கொள்ளும் வசதி, திருமணம் செய்துகொள்வதற்கு முன் அனுமதி நாள் பெறும் வசதி.

6. காவல்துறையின் சேவை கள், புகார்களை ஆன்லைனில் பதிவுசெய்யும் வசதி. புகார் மனு தொடர்பான தற்போதைய நிலையை தெரிந்துகொள்ளும் வசதி. முதல் புலனாய்வு அறிக்கை, தொலைந்துபோன வாகனம் தொடர்பாக தகவல் தெரிந்து கொள்ளும் வசதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in