

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 1,400 ஆம்னி பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குபிறகு பொதுமக்கள் வழக்கம்போல மீண்டும் வெளியூர்களுக்கு பயணம் செய்ய தொடங்கிவிட்டனர்.
எனவே, வரும் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, மொத்தம் 1,400 ஆம்னி பேருந்துகளை இயக்க அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு வரும் 12-ம் தேதி 470 பேருந்துகள், 13-ம் தேதி 493 பேருந்துகள், 14-ம் தேதி 450 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.
பண்டிகை முடிந்த பிறகும் தேவைக்கு ஏற்ப, ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.