கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்டித்து தக்கலையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்டித்து தக்கலையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து தக்கலையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கேரளாவில் கட்டப்பட்டு வரும் விழிஞம் சர்வதேச துறைமுகத்துக்காக கன்னியா குமரியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் பெயர்க்கப்பட்டு, விதிகளுக்கு புறம்பாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக கூறியும், அதைக் கண்டித்தும் தக்கலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் எதிரான சுரண் டலை கண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பினர்.

செய்தியாளர்களிடம் சீமான் கூறும்போது, “ இயற்கையின் பெரும் கொடையாக இருக்கக் கூடிய மலைகளை ,குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளை கற்களாகவும், பொடிகளாகவும் கேரளாவுக்கு எடுத்துப் போகிறார்கள் . இதனைக் கண்டித்து பலப் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது. மலைகளை உடைத்து கடத்துவதை தடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது" என்றார்.

சுற்றுச்சூழலுக்கு எதிரான சுரண்டலை கண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in