Last Updated : 10 Oct, 2021 03:37 PM

 

Published : 10 Oct 2021 03:37 PM
Last Updated : 10 Oct 2021 03:37 PM

கரோனா நேரத்தில் மனநல பாதிப்பு உலக அளவில் அதிகம்; அதிலிருந்து மீள குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அவசியம்: புதுவை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி

கரோனா நேரத்தில் மனநல பாதிப்பு உலக அளவில் அதிமாக இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

உலக மனநல நாளையொட்டி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று(அக். 10) நடைபெற்ற பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:‘‘நாம் உடலை பேணுகிற அளவுக்கு மனதை பேணுவது இல்லை. மனதையும் பேண வேண்டும். உடலுக்கு பயிற்சி கொடுப்பது போன்று மனதுக்கும் பயிற்சி கொடுத்து பாதுகாக்க வேண்டும்.

கரோனா நேரத்தில் மனநல பாதிப்பு உலக அளவில் அதிகமாக இருக்கிறது. பலர் தமக்கு நெருக்கமானவர்களை இழந்திருக்கிறார்கள். பலர் தாமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு வருவதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை நாம் காதுகொடுத்து கேட்கவேண்டும். மனதுக்குப் பயிற்சி கொடுத்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது மனநல பாதிப்பில் இருந்து விடுபடலாம். அதேபோல மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.’’என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலர் அருண், இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், ஊழியர்கள் பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x