Published : 27 Mar 2016 10:47 AM
Last Updated : 27 Mar 2016 10:47 AM

சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் தேர்தல்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை: மக்கள் நலக் கூட்டணி வழக்கறிஞர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம்

தேர்தல்களில் விகிதாச்சார பிரதி நிதித்துவம் என்ற அடிப்படையில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நலக் கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

மக்கள் நலக் கூட்டணி வழக் கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சி யில் நேற்று நடைபெற்றது. மதிமுக சட்டத் துறைச் செயலாளர் ஜி.தேவ தாஸ் தலைமை வகித்தார். இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண் டியன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் திரு மாவளவன், தேமுதிக வழக்கறிஞர் அணிச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

முதல்வர், அமைச்சர்கள், எம்பிக் கள், எம்எல்ஏக்கள் மீது மக்கள் அளிக்கும் ஊழல் புகார்களை விசா ரித்து உரிய தீர்ப்பு வழங்க தமிழ கத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும். இலங்கையில் தமிழர் களை கொன்று, இனப்படுகொலை செய்தவர்களை குற்றவாளிக் கூண் டில் நிறுத்தி, பன்னாட்டு நீதிபதி களைக் கொண்டு விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.

சிறுபான்மையினரும், சிறிய கட்சிகளும் தங்களது நிலைப் பாட்டை நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில், தேர்தல்களில் விகிதாச்சார பிரதி நிதித்துவம் என்ற அடிப்படையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். இதற் காக நாட்டில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்ற அமர்வு கள் நிரந்தரமாக செயல்பட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நட வடிக்கை எடுக்க வேண்டும். மெட் ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய, மாநில அரசுகள் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். தமிழகத் தில் உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன் றத்தில் மத்திய பாதுகாப்புப் படை யின் பாதுகாப்பை விலக்கி, மாநில காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கறிஞராக பதிவு செய்ய தனியாக தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும் என்ற முறையை ரத்து செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற அமர் வுக்கு உள்ள சாதாரண முதலேற்பு அதிகார வரம்பு, தேர்தல் வழக்கு களை விசாரிக்கின்ற தேர்தல் தீர்ப்பாய அதிகாரம் ஆகியவற்றை உயர் நீதிமன்ற மதுரை கிளைக் கும் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியி னரை பழிவாங்க பயன்படுத்தப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) தேசதுரோக குற்றச் சாட்டு பிரிவை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மதிமுக வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருள் நன்றி கூறினார். தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கள் கட்சிகளைச் சேர்ந்த வழக் கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x