

தஞ்சாவூரில் நகைக் கடை காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சென்னை இளைஞரை மருத்துவமனைக்குள் புகுந்து கொலை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் காசுக்கடை தெரு வில் அண்மையில் நகைக் கடை கொள்ளையைத் தடுத்த காவலாளி கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக தஞ்சா வூர் விளார் சாலை காயிதே மில் லத் நகரைச் சேர்ந்த ரமேஷ், கலைஞர் நகர் மோகன், சென்னை தண்டையார்பேட்டை பரமேஸ்வரி நகர் கார்த்தி, பேசின் நகரைச் சேர்ந்த கிரண், எண்ணூர் சிவ காமி நகரைச் சேர்ந்த ரமேஷ், மோகன், சையத் ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில், போலீஸார் பிடிக்க முயன்றபோது, காயமடைந்த சென்னை எண்ணூர் ரமேஷ்(23), மோகன், சையத் ஆகியோர் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தப்பி ஓட்டம்
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ரமேஷின் படுக்கை அருகே சந்தேகத்துக்கிடமான நிலையில், ஒருவர் நிற்பதைக் கண்ட போலீஸார், அவரை அழைத் துள்ளனர். ஆனால், அவர் அங்கி ருந்து தப்பியோடி, கறுப்பு நிற காரில் ஏறிச் சென்றார்.
இதுகுறித்த தகவலின்பேரில், தஞ்சாவூர் புறவழிச்சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே போலீஸார், அந்த காரை மடக் கினர். அதிலிருந்த 8 பேரில் 5 பேர் தப்பியோடி விட்டனர். தஞ்சாவூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த மணிய ரசன்(20), திருச்சி காட்டுக்குறிச்சி ஜே.டி.புரம் ராஜாமுகமது(21), திருநெல்வேலி வி.கே.புரம் அம்பை நகரைச் சேர்ந்த அய்யப்பன்(21) ஆகிய மூவரும் பிடிபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், காரையும் அதிலிருந்து 2 பெரிய வாள்கள், ஒரு நாட்டு வெடிகுண்டு ஆகியவற் றையும் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், நகைக்கடை காவ லாளி கொலையில் கைது செய்யப் பட்ட சென்னை எண்ணூரைச் சேர்ந்த ரமேஷ், பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதும், அவரை கொலை செய்ய சென்னை யிலிருந்து 8 பேர் கொண்ட கும்பல் தஞ்சை வந்ததாகவும், இதற்காக மருத்துவமனையில் ரமேஷை நோட்டமிட்டபோது பிடி பட்டதாகவும்” தெரிவித்தனராம்.
தொடர்ந்து, தப்பியோடிய மற்ற 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.