ஆளுங்கட்சியான பிறகும் திமுகவின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை: பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியான பிறகும் திமுகவின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை: பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஆளுங்கட்சியாக வந்த பிறகும் திமுகவின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழகஅமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பாஜக தலைவர்அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக எம்.பி.க்களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் என்பவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம், பாஜகநிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரன் மீது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இவர் மீதும் கடுமையான வழக்கு பதிவு செய்து காவல் துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியாணி கடை முதல் டீக்கடை வரை திமுகவின் அராஜகத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆளுங்கட்சியாக வந்த பிறகும்கூடஅதே பழக்கத்தைதான் தொடர்கின்றனர். ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும், இவர்களது வன்முறை கலாச்சாரம் மட்டும் மாறவில்லை.

இப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழகத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும்.

இதுபோன்ற நேரத்தில் அரசியல் பாரபட்சம் பார்க்காமல் காவல் துறை தனது கடமையை சரியாக செய்ய வேண்டும். ஞானதிரவியம் எம்.பி. மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டி இருக்கும் என்பதை காவல்துறைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

சேகர்பாபுவுக்கு பதில்

சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை நேற்று பேசும்போது, ‘‘கரோனா பாதிப்பு உறுதி செய்வது 5 சதவீதத்துக்கு மேல் வரும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுமாறு மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, தமிழகத்தில் உடனடியாக அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க வேண்டும். 1,000 பாஜக வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது என்கிறார் அமைச்சர் சேகர்பாபு. 100 பூத் தலைவர்களை அனுப்பி திமுகவை அசைத்து காட்டுகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in