

மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் ஒரு மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் வாக்குஎண்ணிக்கை நடைபெறும் மையங்களில், வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெளியில் இருப்பவர்கள் பார்க்கும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் தவிர மற்றவர்களை அனுமதிக்க கூடாது. ஒரே நிலையான பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும். அதை மாற்றக் கூடாது. தற்போது வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறை உள்ள பகுதியில் வேட்பாளர், வேட்பாளரின் முகவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அத்துடன், ஸ்டிராங் அறையின் உள் நிகழ்வுகள் வெளியே திரையில் தெரியும்படி ஒளிபரப்ப வேண்டும். தாமதம் செய்யாமல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.